About us

ஜோதிட ரத்னா திரு. மகா ராமதாஸ்
ஸ்ரீ அய்யனார் ஜோதிட நிறுவனம், ஜோதிட ரத்னா திரு. மகா ராமதாஸ் அவர்களால் நடத்தி வரப்படுகிறது. தமிழ் நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்த திரு. ராமதாஸ் ஜோதிட சாஸ்திரத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றவராவார்.
இவர் ஸ்ரீ ராமானுஜர் ஜோதிடப்பயிற்சி மற்றும் கல்வி மையத்தில் முறையாக பயிற்சி பெற்று ஜோதிட ரத்னா என்ற சான்றிதழை பிரபல ஜோதிடர்களான காழியூர் திரு. நாராயணன், திரு. ஷெல்வி ஆகியோரின் பொற்கரங்களால் பெற்றுள்ளார்.
ஒருவருடைய ஜாதகப் பலன்களை சரியாக கணித்து தருவதில் சிறப்பான அனுபவம் பெற்றுள்ள திரு. ராமதாஸ், 2017 ஆண்டு முதல் மிகச் சிறந்த முறையில் ஜோதிடம் பார்த்து வருகிறார்.
மேலும் கீழ்க்காணும் சேவைகளும் சிறந்த முறையில் அளிக்கப்படுகின்றன.
- சுபமுகூர்த்த நேரம் குறித்தல்
- திருமண பொருத்தம்
- ஜாதகப்படி பெயர் வைத்தல்
- வேலைவாய்ப்பு குறித்த பலன்கள்
- குழந்தை பாக்கியம் குறித்த பலன்கள்
- வாஸ்து ஆலோசனை மற்றும் பரிகாரங்கள்
- ராசிக்கல்
மற்றும் சகல பிரச்சனைகளுக்கும் ஜாதகப் பலன்களும் பரிகாரங்களும் சொல்லப்படுகிறது.
திரு. மகா. ராமதாஸ் இறையருளுடன் கூடிய சிறந்த வாக்கு சக்தியுள்ள ஜோதிடராவார்.